For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஜெயலலிதா நிதியுதவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விருதாச்சலம் பகுதியில் ரயில் விபத்தில் படு காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிதியுதவியும்,சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ,25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து இருந்து மங்களூருக்கு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், நள்ளிரவு 2 மணியளவில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Mangalore express train accident Jayalalitha announce relief fund

மொத்தம் 5 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்ததாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.காயமடைந்த அனைவரும் விருதாச்சலம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேரின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும்,ஏனையவர்கள் சிகிச்சை முடித்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விருதாச்சலம் பகுதியில் ரயில் விபத்தில் படு காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிதியுதவியும்,சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ,25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalitha has announced Viruthachalam train mishap, Rs 50,000 for grievously injured passengers and Rs 20,000 for those who sustained less injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X