For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்கோவா, அல்போன்சா... ரகம் ரகமாக கிருஷ்ணகிரியில் அணிவகுக்க வரும் மாம்பழங்கள் - வீடியோ

கிருஷ்ணகிரியில் வரும் ஜூன் 17ஆம் தேதியிலிருந்து மாம்பழக் கண்காட்சி தொடங்கவுள்ளது. அது 23 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அகில இந்தியா மாம்பழக் கண்காட்சி ஜூன் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. கண்காட்சி நடக்கவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கதிரவன் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரியில் 15ஆவது அகில இந்திய மாம்பழ கண்காட்சி கிருஷ்ணகிரியில் தொடங்கவுள்ளது. அதற்காக பிரத்யேக கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 36 கூடங்கள் அரசு கண்காட்சியினருக்கும் 80 தனியாருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 Mango exhibition in Krishnagiri

இதில் பல்வேறு வகையிலான மாம்பழங்கள் இடம்பெறும். சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட மாம்பழங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அரசு தோட்டக்கலை சார்பில் உற்பத்தி செய்யபப்ட்ட பழங்களும் தனியாரின் பழங்களும் கண்காட்சியில் இடம்பெறும். இந்தக் கண்காட்சியில் 6 லட்சம் பேர் பார்வையாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்தக் கண்காட்சி ஜூன் 17ஆம் தேதி தொடங்கப்பட்டு, 23 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்தக் கண்காட்சி வேலைகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் பார்வையிட்டார்.

English summary
In krishnagiri grand mango exhibition will be started on June 17th and last for 23 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X