For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தத்தளிக்கும் ஸ்பைஸ்ஜெட்... என்னது கலாநிதியிடம் ரூ.2,000 கோடி கூட இல்லையா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதியின்றி தத்தளிப்பதாகவும் உதவ வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கலாநிதி மாறனின் சன் குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மொத்தமாக ரூ2 ஆயிரம் கோடி அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Maran has the cash to bail out company

இதனால்தான் டெல்லியில் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப முடியாது என்று எண்ணெய் நிறுவனம் அறிவிக்க பெரும் களேபரமானது.

இப்படி ரூ 2 ஆயிரம் கோடி இல்லாமல்தான் மத்திய அரசின் உதவி கேட்டதாகவும் ஸ்பைஸ்ஜெட் கூறுகிறது.. அதுவும் ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கூட கொடுக்க முடியாத நிலைமையாம் ஸ்பைஸ்ஜெட்.. நிறுவனத்துக்கு.

சன் டிவி நெட்வொர்க்கின் மொத்த சந்தை மதிப்பு ரூ13, 243 கோடி. இதில் கலாநிதி மாறன் குடும்பத்தினருக்கு மட்டும் 75% பங்குகள் உள்ளன. அதாவது கலாநிதி மாறன் குடும்பத்தினரின் பங்கு மதிப்பு ரூ9,932 கோடி.

கலாநிதி மாறன் குடும்பத்தினரின் பங்குகளில் ஒரு பகுதியை விற்றாலே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அத்தனை கடனையும் அடைத்து சுமூகமாக இயக்கிவிடலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். அத்துடன் மட்டுமின்றி சன் டிவியானது 2013-14 நிதியாண்டில் ரூ717 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

அதாவது சன் டிவியின் வருவாய் ரூ2,097 கோடி. இது ஸ்பைஸ்ஜெட் வருவாயைவிட குறைவு. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 6,356 கோடி. இது அந்நிறுவனத்துக்கு 1,003 கோடி நட்டமாகும்.

இவை தவிர எஸ்.சி.வி.யை உள்ளடக்கிய கல் கேபிள்ஸ் நிறுவனத்தில் 75% பங்குகள், சன் டைரக்ட் டி.டி.எச்.-ல் 80% பங்குகள் கலாநிதி மாறன் குடும்பத்துக்கு உள்ளது. சன் டைரக்ட்டின் கடந்த ஆண்டு வருவாய் ரூ370 கோடி.

இந்தியாவின் 38 வது பணக்காரர் கலாநிதி மாறன் என்கிறது போர்ப்ஸ் பத்திரிகை. அவரது மனைவி காவேரி, இந்தியாவில் அதிகஊதியம் பெறும் தலைமை நிர்வாகிகளின் பட்டியலிலும் இருக்கிறார். கலாநிதிக்கும் அவரது மனைவிக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ119.6 கோடி ஊதியம் கொடுக்கப்படுகிறது.

கலாநிதி மாறனிடம் இருக்கும் பணத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல.. அத்தனை ஸ்பைஸ்ஜெட் கடனையும் அடைக்க முடியும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

English summary
Kalanathi Maran and family, the promoters of the Sun group that runs cash-strapped SpiceJet, have enough cash to finance a bailout of the airline, whose operations remained partly suspended on Wednesday because it was unable to pay cash for aviation turbine fuel (ATF) to oil companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X