For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்

எம்பிபிஎஸ் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.

MBBS admission: TN students get 2203 seats

நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில், நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ பாட திட்ட மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. எம்பிபிஎஸ் விண்ணப்பத்தை ஜூலை 27-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MBBS admission: TN students get 2203 seats

2203 இடங்கள் மாநில பாட திட்ட மாணவர்களுக்கும், 391 இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் கிடைக்கும். அகில இந்திய இடஒதுக்கீடு போக தமிழகத்தில் மொத்தம் 2594 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 624 இடங்கள் அரசுக்கு கிடைக்கும்.

மருத்துவ சேர்க்கையானது நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறும். நிகர்நிலை பல்கலையில் எம்பிபிஎஸ் சேர்க்கை மத்திய அரசு மூலம் நடைபெறும் என்றனர்.

English summary
Minister Vijayabaskar and Health department secretary said that tamil nadu students will get 2203 medical seats by reserving 85 % for state board students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X