For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் சாக்கடையை மாற்றும் அடைமழையாக மாறுவோம்.. பொன்ராஜ் அறைகூவல்

தமிழகத்தில் ஓடும் அரசியல் சாக்கடையை மாற்றும் அடைமழையாக அனைவரும மாற வேண்டும் என்று பொன்ராஜ் அறைகூவல் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது நம்பிக்கை இழந்த வாக்கெடுப்பு என்று அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சியின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம், மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம். மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு. மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு. மாற்றிக்காண்பிப்போம் நண்பர்களே...... அரசியல் சாக்கடையை மாற்றும் ஒரு நல்ல அடைமழையாக மாறுவோம் என்று சமூகத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

Mentor and Advisor at Abdul Kalam Vision India Party V Ponraj slams ADMK MLAs

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெ. பொன்ராஜ் விடுத்துள்ள செய்தி:

ஒன்றை கோடி மாணவர்கள் 8 நாட்கள் தமிழகம் முழுவதும் அமைதியாக ஒழுக்கத்துடன், ஒரு யுகப்புரட்சி நடத்தினானே, அதில் எவ்வித அசம்பாவிதமும் இல்லையே. ஆனால் 234 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, காவல்துறையை வைத்துக்கொண்டு, ஒரு சபாநாயகரால் ஒரு ஒட்டெடுப்பை ஜனநாயக முறையில் ரகசியமாக நடத்த தெரியாத உங்கள் கைகளிலா இந்த தமிழ்நாடு. சல்லிக்கட்டில் தமிழனை தலை நிமிர வைத்த ஒவ்வொரு இளைஞனும், மாணவனும், பொது மக்களும் இன்றைக்கு உங்கள் செயலை பார்த்து வெட்கப்பட வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டை இந்த உலகம் மதிக்கும் நிலையை கொடுத்தான் தமிழ் இளைஞன். இந்த தமிழ்நாட்டின் மாண்பை கெடுத்தார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரும் சேர்ந்து நேற்று. வாக்காளனை வாகனத்தில் அழைத்து வந்தால் அபராதம். வாக்காளனுக்கு ஒட்டு போடுவதற்கு சாப்பாடு போட்டால் தண்டனை.

ஆனால் நாம் தேர்ந்தெடுத்த MLA க்கள், வாக்களிக்க இதில் எதுவுமே இல்லை. என்ன ஜனநாயகம் இது..... பதவியை தக்க வைக்க எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் - கேவலம். 124 சட்டமன்ற உறுப்பினர்களும் தெளிவாக வாக்களிக்க உள்ளார்கள் என்ற நம்பிக்கை இருந்தால், சபாநாயகர் மக்கள் வாக்களிப்பதைப்போல் ரகசிய வாக்கெடுப்பு எடுத்திருந்தால் இந்த சட்டசபை அராஜகம் நடந்திருக்காது. 120 சரியா? இல்லை 122 சரியா? இதிலும் எது சரி என்று தெரியவில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் இந்த பினாமி ஆட்சி முடிந்திருக்கும். குமாரசாமி கணக்கு தவறை உச்சநீதி மன்றம் போன வாரம் தான் சரி செய்தது. சட்டசபை கணக்கு தவறை யார் சரி செய்வது, கவர்னர் செய்வாரா இல்லையென்றால் மக்கள் மன்றம் கூடிய சீக்கிரம் சரிசெய்யும். இதை ஒழுங்காக, முறையாக, ஜனநாயக முறைப்படி செய்யாமல் தவறியது சபாநாயகர் எடுத்த நம்பிக்கையில்லா நம்பிக்கை வாக்கெடுப்பு.

இப்படிப்பட்ட ஆட்சியை கவர்னர் கலைப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை, ஏனென்றால் அதிலும் அரசியல் இருக்கும், ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இருக்கும் என்று தெரிகிறது. நடக்கட்டும், தமிழக இளைஞர்களே தயாராகுங்கள், வரும் காலங்களில் மக்களை சந்திப்போம், மாற்றத்தை உருவாக்குவோம். இதைப்பார்க்கும் போது..... தமிழ்நாட்டை அவமானப்படுத்திய சட்ட மன்ற உறுப்பினர்களை பார்க்கும் போது...... என் நினைவுக்கு வருகிறது, நான் கீழே குறிப்பிட்டுள்ள ஒரு எம்.ஜி.ஆர் பாடல்......

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

அதிமுக 122 சட்டமன்ற உறுப்பினர்களே.......
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு.
மாற்றிக்காண்பிப்போம் நண்பர்களே......
அரசியல் சாக்கடையை மாற்றும் ஒரு நல்ல அடைமழையாக மாறுவோம்!

English summary
Mentor and Advisor at Abdul Kalam Vision India Party V Ponraj has slammed the ADMK MLAs and asked the state to rise against the injustice done in the Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X