தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுமாம்.. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக பட்சமாக திருத்தணியில் இன்று 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, கரூர், திருச்சி, மதுரையில் இன்று வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது.

Meteorological department has warned tomorrow is going to be really very hot

இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவையின்றி பகல் 12 மணி முதல் 3 மணிவரை பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அனல் காற்று வீசும் மாவட்டங்கள் விவரம்:

1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.திருவள்ளூர்
4.வேலூர்
5.கடலூர்
6.திருவண்ணாமலை
7.விழுப்புரம்
8.நாகப்பட்டிணம்
9.புதுக்கோட்டை
10.தர்மபுரி
11.நாமக்கல்
12.சேலம்
13.கரூர்
14.ஈரோடு
15.திருச்சி
16.பெரம்பலூர்
17.கிருஷ்ணகிரி
18.அரியலூர்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Meteorological department has warned tomorrow is going to be really very hot in 18 districts in tamilnadu.
Please Wait while comments are loading...