அதிமுக அரசை விமர்சிக்க கமலுக்கு அருகதை இல்லை.. பிராண்டும் சி.வி.சண்முகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அரசை விமர்சிக்கும் அருகதை கமலுக்கு இல்லை என அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக சாடியுள்ளார். நடிகர் அஜித்துக்கு இருந்த துணிச்சல் நடிகர் கமல்ஹாசனுக்கு இல்லை என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் முதல்வர் விழாவில் அஜித் பேசிய போது கமல்ஹாசன் எங்கு சென்றிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister CV Shanmugam accuses Actor Kamalhassan

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அனைத்து அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகர் அஜித்துக்கு இருந்த துணிச்சர் நடிகர் கமல்ஹாசனுக்கு இல்லை என சாடினார். நடிகர்களை மிரட்டுவதாக திமுக ஆட்சியில் முதல்வர் விழாவில் அஜித் பேசிய போது கமல் எங்கு சென்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக அரசை விமர்சிக்கும் அருகதை கமலுக்கு இல்லை என்றும் சிவி சண்முகம் சாடினார். மேலும் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் போலியானவை என்றும் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.

Minister Anbazhagan insulting Actor Kamalhassan-Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Minister CV Shanmugam accuses Actor Kamalhassan. He said Kamal does not having braveness like Ajith.
Please Wait while comments are loading...