For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சருக்குள் உறங்கிக் கொண்டிருந்த "டாக்டர்" வெளியில் வந்த அந்த தருணம்....!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், தனது மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதன்பின் நேற்று மாலை 4 மணியளவில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேராலயத்தில், ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

Minister helped for an accident suffered young man…

அப்போது, மேட்டுச்சாலை என்ற இடத்தில் அரசு பேருந்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை கண்டதும் அமைச்சர் விஜயபாஸ்கர், உடனே தனது காரை நிறுத்த சொல்லி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை சென்று பார்த்துள்ளார். அடுத்த நிமிடமே 108க்கு தனது செல்போனில் இருந்து தகவல் தெரிவித்தார்.

108 வாகனம் வருவதற்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபருக்கு மருத்துவரான அமைச்சார் தனது காரில் இருந்த மருந்துகளை கொண்டு மனிதாபிமானத்துடன் முதலுதவி செய்தார்.

108 வாகனம் வர தாமதமான நிலையில், அந்த வாலிபர் வலியால் துடி துடித்து கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த வாலிபரை அப்படியே விட்டு விட்டுச்செல்ல மனமில்லாத அமைச்சர், தன் பாதுகாப்பிற்காக வந்த வாகனத்தினை உடனே அழைத்து அந்த வாலிபரை அதில் ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

அதன் பின் தன் கடமை முடிந்துவிட்டது என்று அங்கிருந்து செல்லாமல், உடனே மருத்துவமனைக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுத்து மருத்துவார்களை தயாராக இருக்க சொல்லியும், அந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்பின், அந்த வாலிபரை பற்றி விசாரித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், அந்த வாலிபருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அந்த வாலிபரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், உடனே தனது சட்டை பையில் இருந்து ரூபாய் 5 ஆயிரத்தை எடுத்து நிதி உதவியும் செய்தார். அந்த வாலிபரின் குடும்பத்தினர் அமைச்சரின் இந்த செயலுக்கு மனமுருகி நன்றி தெரிவித்து கொண்டனர்.

அதை தொடர்ந்து, மரணத்தின் பிடியில் இருந்த வாலிபரை காப்பாற்றிய மன நிறைவுடன் அமைச்சர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அமைச்சரின் இந்த மனிதாபிமானமிக்க செயலைக் கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர்.

இதேபோல், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்தவர் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pudukkottai origin health minister Vijayabaskar saved a life of a young man and admit him in hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X