வெற்றிவேல் எம்எல்ஏ கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ பேசும் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராகப் பேசினால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் எனத் தினகரன் ஆதரவான எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

Minister Jayakumar attackes Vetrivel

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஜெயக்குமார், வெற்றிவேல் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நன்றாகவே இருக்கிறது என்றும் ஜெயக்குமார் கூறினார். தினகரன் விதித்திருந்த காலக்கெடு வரும் 5ம் தேதியோடு முடிவடையும் நிலையில், எடப்பாடி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே எதிர்ப்பு அதிகரித்து ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayakumar speech Was like a Rap Song - Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Finance Minister Jayakumar has attacked Vetrivel MLA, who supporter of TTV Dinakaran.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்