For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

நடிகர் கமல்ஹாசன் படத்தில் தான் முதல்வராக முடியும் நிஜத்தில் அல்ல என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவள்ளூர் : நடிகர் கமல்ஹாசனால் படத்தில் தான் முதல்வராக முடியும் நிஜத்தில் அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி, தமிழக மக்கள் விரும்பினால் முதல்வராவேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார். ரஜினி, கமல் என முன்னணி திரை நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்புகளுக்கு மத்தியில் கமலின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 Minister Rajendra Balaji jibes Kamalhaasan over his CM for TN people comment

மேலும் விரைவில் மக்களை சந்திக்க உள்ளதாக, மக்களுக்கான கருவியாகவே தான் அரசியலில் செயல்படப் போவதாகவும் கமல் கூறியிருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்து குறித்து திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் நிஜ வாழ்க்கையில் முதல்வராக முடியாது. அவரால் திரைப்படத்தில் தான் முதல்வராக முடியும். முதலில் மக்கள் பிரதிநிதியாக வந்து மக்கள் பிரச்னையை தீர்த்துவிட்டு பின்னர் முதல்வராகலாம் என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது அரசின் எல்லாத்துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டடதாகக் கூறியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் ஒட்டு மொத்தக் குரலில் அரசியலுக்கு வந்துவிட்டு பேச வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் நான் எப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Rajendra balaji says that Kamalhaasan may become CM in the reel life but not in the real life and also adds first he could serve for people to solve their problems later he will say about CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X