For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து முடக்கம்... கல் குவாரிக்கும் சீல்... விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து 'ஷாக்': வீடியோ

புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல்குவாரியை பத்திரப் பதிவு அலுவலர்கள் இன்று காலை சீல் வைத்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியை புதுக்கோட்டை பத்திரப்பதிவு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும் அமைச்சர்களின் செயல்பாடுகளிலும் தினம் ஒரு பரபரப்பு காட்சி அரங்கேறி வருகிறது. மொத்த இந்தியாவும் தமிழகத்தில் நடக்கும் காட்சிகளை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருகின்றனர்.

Recommended Video

    Minister Vijayabaskar's Stone Quarry Sealed-Oneindia Tami

    இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம் என மொத்தம் 30 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதன் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் மொத்தக் குடும்பமும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளித்தனர்.மேலும், அவருக்குச் சொந்தமான நிலம் மற்றும் கல்குவாரி முடக்கப்படுவதாக வருமானவரித் துறை அறிவித்தது.

    அதனையடுத்து, எப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் அடுத்தகட்ட நகர்வாக புதுக்கோட்டை திருவேங்கைவாசல் என்னும் ஊரில் அவருக்குச் சொந்தமாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கல்குவாரிக்கு இன்று புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகர்கள் சீல் வைத்தனர்.

    இந்த சீல் நடவடிக்கையை எடுத்த பத்திரப் பதிவாளர் சசிகலாவை அதிரடியாக விருதுநகருக்கு தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது அனைத்துத் தரப்பினரையும் கோபமடையச் செய்துள்ளது.

    வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தது, குட்கா ஊழல் புகார் என அடுத்தடுத்து சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி. ஆனால் கடமையை ஒழுங்காகச் செய்த அதிகாரிக்கு இடமாற்றமா என சமூகவலைதளங்களில் நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமைச்சரை பதவியிலிருந்து ஏன் விலக்கவில்லை எனற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Minister Vijayabhaskar's quarry sealed by registrar officials at today morning after IT department recommendations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X