For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் ஸ்லீப்பர் செல்கள்... ஒட்டு மொத்த ராஜினாமா முடிவை ஸ்டாலின் ஒத்திப்போட்ட பின்னணி

எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக தினகரன் கூறி வரும் நிலையில் திமுகவில் ஆளுங்கட்சி ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் உருவாகி இருக்கிறார்களாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் அதிமுக ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் உருவாகி இருப்பதாக அறிவாலய வட்டார பட்சிகள் ரகசியமாக கூவி வருகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி தர அனைத்து திமுக எம்எல்ஏக்களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில் எம்எல்ஏக்கள் கூட்டமும் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

ஆளுநர், சபாநாயகர், முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றி விட்டு கூட்டத்தை முடித்துக்கொண்டனர். ஒட்டுமொத்த ராஜினாமா முடிவை ஸ்டாலின் ஒத்திப்போட்டதன் பின்னணிக்கு காரணமே இந்த ஸ்லீப்பர் செல்கள்தானாம்

தகுதிநீக்கத்திற்கு தடையில்லை

தகுதிநீக்கத்திற்கு தடையில்லை

தகுதிநீக்க வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட நீதிமன்றம், உடனே இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் நிலைப்பாடு

திமுகவின் நிலைப்பாடு

அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து எம்எல்ஏக்களை இழுக்கலாமா என்று யோசனை சொன்னார்களாம். ஆனால் அது நடக்கிற காரியமில்லை என்று மூத்த தலைவர்கள் கூறி விட்டார்களாம்.

ஸ்லீப்பர் செல்கள்

ஸ்லீப்பர் செல்கள்

அதிமுக எம்எல்ஏக்களை அவங்க பக்கத்தை இழுப்பது இருக்கட்டும் எங்களுக்கு ஆதரவாகவே பல எம்எல்ஏக்கள் அங்கே இருக்கிறார்கள் என்று தெம்பாக பேசி வருகிறார்களாம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர். இதை கேள்விப்பட்டு அந்த எம்எல்ஏக்கள் யார் யார் என்று ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறாராம் ஸ்டாலின்.

எதுவுமே செய்யமுடியாதா?

எதுவுமே செய்யமுடியாதா?

நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் இப்போதைக்கு எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அது திமுகவின் மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரிந்து உள்ளது. எனவேதான் இப்போதைக்கு ஒட்டுமொத்த ராஜினாமா என்ற ஆயுதத்தை கையில் எடுக்க தயாராக இல்லை.

எம்எல்ஏக்களுக்கே விருப்பமில்லை

எம்எல்ஏக்களுக்கே விருப்பமில்லை

திமுக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோருக்கு மாஸ் ராஜினாமாவில் விருப்பமில்லையாம். காரணம் முதல்முறையாக எம்எல்ஏவான பலரும் தேர்தலில் செலவழித்த பணத்தை நினைத்துதான் ராஜினாமா செய்ய யோசிக்கிறார்களாம். அதோ மாத வருமானத்தை இப்போதைக்கு இழக்க பலரும் தயாராக இல்லையாம்.

ஒத்திப்போட்ட ஸ்டாலின்

ஒத்திப்போட்ட ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டாலும் அது உண்மைதான் என்பதை உணர்ந்தே இருக்கிறார் ஸ்டாலின். எனவேதான் ஒட்டு மொத்த ராஜினாமா செய்வது என்ற திட்டத்தை இப்போதைக்கு ஒத்தி போட்டிருக்கிறாராம்.

English summary
Sources said sleeper cells in DMK. Many DMK MLAs are supporting Edapadi Palanisamy government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X