For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் நினைவு மண்டப நிகழ்ச்சி: மருந்துக்குக் கூட இலங்கையின் அட்டூழியத்தை கண்டிக்காத மோடி

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கையை பிரதமர் மோடி ஒப்புக்கூட கண்டிக்கவில்லை என்பதால் ராமேஸ்வர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்து வரும் இலங்கை கடற்படையை பிரதமர் மோடி மருந்துக் கூட கண்டிக்காதது ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக மீனவர்கள் பிரச்சினை உள்ளது. இதற்கு எந்த ஒரு அரசும் தீர்வு காணாமலேயே உள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதோடு சரி, சுமூக பிரச்சினைக்கு எதையும் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

 மோடியின் பாசம்

மோடியின் பாசம்

இந்த உலகத்தின் எந்த மூலையில் துப்பாக்கிச் சூடு, தீவிரவாத தாக்குதல் என எது நடந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிப்பார் மோடி. ஆனால் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது கண்டனத்தை கூட தெரிவிக்கமாட்டார் என்பது மக்களுக்கு வேதனை அளித்து வருகிறது.

 கோரிக்கை மேல் கோரிக்கை

கோரிக்கை மேல் கோரிக்கை

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வேட்டையாடுவது, படகுகளை பறித்துக் கொள்வது, மீனவர்களை கைது செய்வது உள்ளிட்ட அக்கிரமங்களை செய்து வருகிறது. அப்போதெல்லாம் மீனவர் பிரச்சினை தீர்வு காணுங்கள் என்று மோடிக்கு தமிழக அரசு கடிதங்கள் எழுதுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது.

 மோடியின் தமிழகம் வருகை

மோடியின் தமிழகம் வருகை

இந்நிலையில் அப்துல் கலாமின் 2-ஆவது நினைவு தினத்தில் அவரது மணி மண்டபத்தை திறந்து வைத்த மோடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அழர் கூறுகையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் ஏற்படும் இன்னல்களை போக்க ஆழ்கடல் மீன்பிடி திட்டம் உதவும் என்றார். இலங்கைக்கு இந்திய சிகப்பு கம்பளம் விரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அதை போக்க அவர் இலங்கைக்கு கண்டனத்தை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Recommended Video

    Kalam Sir's Birthday to be celebrated as World Student's Day
     மருந்துக்குக் கூட...

    மருந்துக்குக் கூட...

    அப்போது மறந்துபோய் கூட இலங்கையின் பெயரை மோடி கூறாதது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும் மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாகக் கூட மோடி பேசவில்லை. பாகிஸ்தானின் தீவிரவாதத்தை பகிரங்கமாக கண்டிக்கும் மோடி இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டிக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    TN People disappoints over Modi has not even condemned Srilanka's attack on TN Fishermen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X