For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நீட்' மூலம் இந்தியைத் திணித்தால் மோடி பதவி பறிபோகும் - பொன்முடி விளாசல்! - வீடியோ

நீட் தேர்வு மூலம் இந்தியை திணிக்க நினைத்தால் மோடி பதவி பறிபோகும் என காரைக்குடியில் நடந்த கருத்தரங்கத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

காரைக்குடி:'நீட்' தேர்வு மூலம் இந்தியைத் திணிக்க முயன்றால் மோடி பதவியை இழப்பார் என காரைக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் மருத்துவ படிப்புக்கு நீட் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு கெடுபிடிகள் மாணவர்களிடத்தில் கடைபிடிக்கப்பட்டது. அந்த கெடுபிடிகளால் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிகுந்த சர்ச்சை உருவானது.

 Modi may lost his post if he tries to put Hindi in Tamilnadu said Ponmudi Ex. Minister

மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி வழியில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும் வங்காளம் உள்ளிட்ட வேறு மொழியில் பரீட்சை எழுதியவர்களுக்கும் வினாத் தாள்களும் மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம் இருந்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் காரைக்காலில் திமுக சார்பில் நடத்தப்பட்டது.அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சியை ஆதரித்த பக்தவச்சலம், ராஜாஜி போன்றவர்கள் ஆட்சியை இழந்தனர். அதுபோல நீட் தேர்வு, பாடத்திட்டம் வழியாக மோடி அரசு இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது. அவ்வாறு செய்தால் நிச்சயம் மோடி பதவியை இழக்க நேரிடும் என பொன்முடி கூறினார்.

English summary
Modi will lost his PM post if he tries to put hindi in TN through NEET exam told Ponmudi ex. minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X