மீனவர்களின் துயரை போக்க நீல புரட்சி உதவும்.. ராமேஸ்வரத்திலிருந்து மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டத்தின் மூலம் மீனவர்கள் பிரச்சினை முடிவு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையூட்டினார்.

அப்துல் கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்காக அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

Modi's Blue revolution will benefit for fishermen

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தின் மூலம் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும். இன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.

ராமர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது ராமேஸ்வரம். ராமர் பிறந்த அயோத்தியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பசுமை ராமேஸ்வரம் திட்டத்தால் ராமேஸ்வரம் மேம்படும் . கடல் போக்குவரத்தை மேம்படுத்த வழி கிடைத்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் மீனவர்கள் பலனடைவர் என்றார் அவர்.

Aurangzeb Road to be renamed after Late APJ Abdul Kalam

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Modi says Pratan mandhir's Blue Revolution project will be put an end to fishermen issue. Deep sea boats are issued using this project.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்