முதல்வர் ஜெ., விரைவில் நலம்பெற பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் பூங்கொத்து அனுப்பி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளனர். குணமடைய வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி கூறியுள்ளார்.

காய்ச்சல் காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும், அப்பல்லோ மருத்துவமனைமுன்பாக நள்ளிரவு முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

Modi and Vidyasagar rao wished CM Jayalalitha

ஜெயலலிதா குணமடைய வேண்டும் என பலர் கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் நடத்தி வருகின்றனர். வடபழனி முருகன் கோவில், பாரிமுனை, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், திருவொற்றியூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகளை நடத்துகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று முக்கிய தலைவர் வாழ்த்து கூறிவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பினார்.
இதேபோல தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், பூங்கொத்துடன் கடிதம் அனுப்பி விரைவில் நலம் பெற வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்காக பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் அம்மா விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minister Modi and Governor Vidyasagar rao have wished CM Jayalalitha to recover fast from the illness.
Please Wait while comments are loading...

Videos