For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 'மோடி அரிசி'யை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த 'டாஸ்மாக்'

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் வாக்குப்பதிவு நடந்த 232 தொகுதிகளில் 136 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

Modi wave powerless in Amma's state

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அவர்கள் விரும்பும் மாற்றமாக நாங்கள் உள்ளோம் என்று கூறி வந்த பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேடைதோறும், பேட்டிதோறும் தெரிவித்து வந்தார்.

பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை.

ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவின் நிலை பரிதாபமாக உள்ளபோது அக்கட்சியில் கோஷ்டி பூசல் வேறு. அம்மா ஆளும் தமிழகத்திலும், தீதி என்று அழைக்கப்படும் மமதா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்திலும் மோடி அலை புஸ்ஸாகிவிட்டது.

English summary
Modi wave couldn't attract people of Tamil Nadu in the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X