For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக உறுதி!

ஓபிஎஸ் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பார் என அந்த அணி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பார் என அந்த அணி தெரிவித்துள்ளது. இதற்காக அக்டோபரில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்றும் அந்த அணி அறிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்குமாறும் அரசு நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

Modi will participate in the MGR ceremony on october : OPS team

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அந்த அணியினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு பிறகு அந்த அணியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது உறுதி அளித்துள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் அதற்காக அக்டோபர் மாதம் தமிழகம் வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The OPS team said that Modi will participate in the MGR ceremony on october. The report also said that Prime Minister Modi is coming to Tamil Nadu in October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X