For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 12 டிரைவர்கள் சஸ்பெண்ட் - எம்.டி.சி. அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதாக கடந்த இரண்டு மாதங்களில் 12 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான விபத்துக்களுக்கு செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அமர்ந்து கொண்டே பயணச்சீட்டு வழங்குதல் உள்ளிட்ட விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகரப் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

MTC Suspends 12 Drivers for Cell Phone-use

இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதாக 12 டிரைவர்கள் மீதும், இருக்கையில் அமர்ந்து கொண்டே பயணச் சீட்டுகள் வழங்கியதாக 11 நடத்துநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

மாநகரில் பேருந்து இயக்கத்தை மேம்படுத்தவும், பயணிகள் முறையாக பயணச் சீட்டு வாங்குகின்றனரா என்பதைப் பரிசோதிக்கவும் சிறப்பு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டு மாதம் இரு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போது, பேருந்தை இயக்கிக்கொண்டே கைப்பேசியில் பேசியதாக 12 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீருடையை முறையாக அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை: இதுபோல் பணியின்போது இருக்கையில் அமர்ந்து கொண்டே பயணச் சீட்டுகளை வழங்கிய 11 நடத்துநர்கள் மீதும், சீருடையை முறையாக அணியாத 25 ஓட்டுநர், நடத்துநர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் ரூ. 17.84 லட்சம் அபராதம் வசூல்: சிறப்பு அலுவலர் குழு கடந்த அக்டோபர் மாதம் 90 பேருந்துகளில் நடத்திய பரிசோதனையின்போது மாநகரப் போருந்துகளில் 10 ஆயிரத்து 360 பேர் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ. 8 லட்சத்து 89 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுபோல் நவம்பர் மாதம் 90 பேருந்துகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 ஆயிரத்து 471 பயணிகள் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ. 8 லட்சத்து 95 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Metropolitan Transport Corporation has suspended 12 drivers, caught on using mobile phone while on the wheels during a special drive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X