என்னை மகனாக அறிவிக்க முயன்றார் ஜெ., மாடியிலிருந்து தள்ளினார் சசிகலா.. ஈரோடு வாலிபர் திடுக் புகார்

ஜெயலலிதா தன்னை அவரது மகனாக உலகுக்கு அடையாளம் காட்ட முற்பட்டபோது அவருக்கும், சசிகலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரை மாடியிலிருந்து சசிகலா கீழே தள்ளிவிட்டார் என்று ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கூறுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.

மாரடைப்பு

75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கண்ணீர் கடலில் தமிழகம்

நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மரணத்தில் மர்மம்

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெ.வின் தோழி கீதா

ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.

திடீர் திருப்பம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

தான்தான் ஜெ.வின் மகன்

அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.

ஜெ.வுக்கும் சசிக்கும் வாக்குவாதம்

இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The intrigue in Tamil Nadu politics just went up a notch as an alleged "secret son" of late chief minister J. Jayalalithaa turned up, claiming that his "mother" was pushed down the stairs by her close aide VK Sasikala following an argument about revealing his real identity to the world.
Please Wait while comments are loading...