For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பேண்ட் போட வேண்டும்... மாணவர்கள் அதிருப்தி!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தமிழகத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இனிமேல் பேண்ட் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வி துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். .

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சில பரிந்துரைகளை செய்து, சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது கல்வித்துறை.

Nagercoil: School students compelled to wear full pants

இது தொடர்பாக பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கூறியிருப்பதாவது, 9ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் பேண்ட் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது. குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வயதினை உறுதி செய்ய வயது சான்றிதழ் பெறுவதற்கு பள்ளியில் செல்லும்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வயது சான்றிதழ் வழங்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English summary
Near Nagercoil a school management has compelled the ninth standard students to wear full pants
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X