For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் களம் இறங்கும் மாஜி துணை சபாநாயகர்... நாமக்கல் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: மாஜி துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி மீண்டும் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக சார்பில்.

நாமக்கல் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.

கே.பொன்னுச்சாமி

சேந்தமங்கலம் பழங்குடியினருக்கான தொகுதியில் போட்டியிடுகிறார் கே. பொன்னுச்சாமிபொன்னுச்சாமி. 9ம் வகுப்பு வரை படித்துள்ள பொன்னுச்சாமி, கொல்லிமலையைச் சேர்ந்தவர். மலையாளி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் தி.மு.க.வில் இருந்த இவர், பிறகு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த 2003-இல் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து, 2006-இல் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-இல் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2007-ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். தற்போது 3-ஆவது முறையாக சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

யுவராஜ்

குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் யுவராஜ்யுவராஜ். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கொங்கு வேளாளர் கவுண்டர். 2000மாவது ஆண்டில் ஆலம்பாளையம் பேரூர் இளைஞரணிச் செயலாளராக இருந்தார். 2002ல் மாவட்டப் பிரதிநிதி, 2004ல் பேரூர் செயலாளராக இருந்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் இருமுறை தொடர்ந்து பேரூராட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். தற்போது தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

வி.பி.துரைசாமி

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் வி.பி.துரைசாமிதுரைசாமி. வழக்கறிஞரான இவரது சொந்த ஊர் திருச்சியாகும். சென்னையில் வசித்து வரும் இவர் இங்கு வந்து போட்டியிடுகிறார். 1984-ஆம் ஆண்டு ராசிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1989-ஆம் ஆண்டு நாமக்கல் (தனி) சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 91-ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை துணை சபாநாயகராக பணியாற்றினார். 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.

பார் இளங்கோவன்

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார் பார் இளங்கோவன்பார் இளங்கோவன். 62 வயதாகும் இவர், நாட்டுக் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர். 1980 முதல் 1992 வரை நாமக்கல் ஒன்றியச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் 2 முறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாநில தேர்தல் பணி செயலாளர், மாநில விவசாய அணி இணைச் செயலாளராக இருக்கிறார்.

கே.எஸ்.மூர்த்தி

பரமத்தி வேலூர்பரமத்தி வேலூர் தொகுதியில் மூர்த்தி போட்டியிடுகிறார். கொங்கு வேளாள கவுண்டர். 1986ம் ஆண்டு கபிலர்மலை ஒன்றியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.

English summary
Namakkal District DMK cadidates bio-data
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X