For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வன்முறை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று காவல்துறையினர் நடத்திய தடியடி பெரும் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மெரினாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் வன்முறை வெடித்தது.

National Human rights commission notice to Tamilnadu government on the violence in Chennai

சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவலர்கள் உட்பட ஏரளாமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சென்னை மெரினாவில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 3 பேர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள் தடியடிக் குறித்தும் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் பொதுமக்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க உள்ளனர்.

English summary
National Human rights commission notice to Tamilnadu government on the violence in Chennai. They are asking tamilnadu govt to answer for this in two weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X