For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு

அமைதியாக நடைபெற்ற போராட்டம் திசை சமூக ஊடகங்களே என்று கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு நக்சல் ஆதரவாளர்கள், மதவாத, இனவாத அமைப்புகளே தலைமை தாங்கியதாக கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பலப் பிரயோகத்தில் இறங்கிய போலீஸார் சரமாரியாக பல இடங்களில் தடியடி நடத்தினர்.

கோவை வஉசி பூங்காவில் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதோடு அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்கள் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேச பிரிவினை கோஷம்

தேச பிரிவினை கோஷம்

இந்த நிலையில் இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். அமைதியாக நடைபெற்ற போராட்டம் திசை மாற காரணம் சமூக ஊடகங்களே என்றும் குற்றம் சாட்டினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனி தமிழ்நாடு முழக்கமிட்டவர்கள், தேச பிரிவினை பற்றி பேசியவர்கள் பற்றி வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பரவும் வதந்தி

பரவும் வதந்தி

இத்தகைய தேச விரோத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் பொதுமக்களின் அமைதி போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நக்சல் ஆதரவாளர்கள், மதவாத, இனவாத அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றனர்.

வாட்ஸ் அப் குழுக்கள்

வாட்ஸ் அப் குழுக்கள்

மறியல் செய்பவர்களை அப்புறப்படுத்துவது போலீஸ் கடமை. வாட்ஸ் அப் மூலம் தேச பிரிவினை வாத குழுக்களுடன் பொதுமக்கள், மாணவர்கள் தொடர்போ நட்போ வைத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற நட்பு தவறான பாதைக்கு கொண்டு செல்லும். தவறான வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்துள்ளவர்கள் விலகி விடுங்கள் என்றும் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறியல் செய்பவர்களை அப்புறப்படுத்துவது போலீஸ் கடமை. வாட்ஸ் அப் மூலம் தேச பிரிவினை வாத குழுக்களுடன் பொதுமக்கள், மாணவர்கள் தொடர்போ நட்போ வைத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற நட்பு தவறான பாதைக்கு கொண்டு செல்லும். தவறான வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்துள்ளவர்கள் விலகி விடுங்கள் என்றும் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உண்மை தெரிந்து பகிருங்கள்

உண்மை தெரிந்து பகிருங்கள்

ஊடகங்களும் உண்மை செய்திகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை உணர்ந்து அனைவருக்கும் பகிர வேண்டும் என்றும் கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Coimbatore police commissoner Amalraj has blamed that Naxal supporters are mixed in the people's protest and leading the agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X