For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆற்காடு அருகே அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு... போலீசார் விசாரணை

ஆற்காடு அருகே அரசுப்பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

வேலூர்: ஆற்காடு அருகே அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் நடத்துனர் காயமடைந்தார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மீது இன்று போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

Near Arcot in Vellore district strangers thrown petrol bombs on the Government bus

போலீசாரின் தடியால் மாநிலம் முழுவதும் பெரும் அசாதாரணமான சூழல் நிலவியது. பல இடங்களில் போலீசாரைக் கண்டித்து சாலைமறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் நடத்துனர் காயமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

English summary
Near Arcot in Vellore district strangers thrown petrol bombs on the Government bus. In this incident the conductor injured. Police have registered a case and investigating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X