மழைவேண்டி நெல்லையில் சிறப்பு யாகம்.. 16 வகையான மூலிகைகளால் மூல மந்திர ஹோமம்...!!!

நெல்லை அருகே மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருக நரசிம்ம பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 16 கரங்களோடு வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் மிகவும் பிரசித்திபெற்ற கடவுளாக போற்றப்படுகிறார்.

Near in Nellai Narasimha perumal temple special yaham held for rain

இன்று இந்த ஆலயத்தில் மழை வேண்டி மாலை 3 மணி முதல் வருண ஜெபமும்,ஸ்ரீ ராம நாம ஜெபமும்,இன்று சசுவாதி நட்சத்திரம் என்பதாலும் சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 16 வகையான மூலிகைகளால் மூல மந்திர ஹோமம், விஷ்ணு சூத்ர ஹோமம்,மகாலக்ஸ்மி ஹோமம்,மற்றும் 12வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

Near in Nellai Narasimha perumal temple special yaham held for rain

தொடர்ந்து மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மழை வேண்டி பிராத்தனை செய்தனர்.

English summary
Near in Nellai Narasimha perumal temple special yaham held for rain. lots of people have been participated in this worship.
Please Wait while comments are loading...