For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சலிங் இன்று தொடக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், மாநில ஒதுக்கீடு, சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு என 2 விதமாக நேற்று வெளியிடப்பட்டது.

NEET counselling starts in Tamilnadu on today

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு 31, 629 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 4 ஆயிரத்து 24 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 4ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

English summary
The counselling notification has also said that candidate should produce all original certificates as directed in clause 19 of the prospectus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X