For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியிருப்பு பகுதியில் புகுந்த மான்கள் – நாய்கள் கடித்ததால் படுகாயம்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மான்களை நாய்கள் கடித்ததால் அவைக்ளில் ஓன்று பரிதாபமாக இறந்தது. ஒரு மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை அருகே கங்கைகொண்டான் மான்கள் சாராணலயம் உள்ளது. இங்கிருந்து தண்ணீர் மற்றும் இரை தேடி மான்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கின்றன. தாழையத்து கணேஷ் நகர் மற்றும் சிதம்பர நகரில் 2 மான்கள் இரை தேடி குடியிருப்பு பகுதியில் புகுந்தன.

அப்போது அங்கிருந்த நாய்கள் துரத்தி சென்று கடித்ததில் இரண்டு மான்களும் படுகாயம் அடைநதன. அதை பார்த்த பொதுமக்கள் மான்களை மீட்டு போலீஸ் மறறும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Nellai forest deer bite by dogs…

ஆனால் வனத்துறையினர் அங்கு வருவதற்கு முன்பே படுகாயம் அடைந்த மான்களில் ஒன்று இறந்து விட்டது. மற்றொரு மானை வனத்துறை அலுவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாழையூத்து, கங்கைகொண்டான் ம்ற்றும அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரை தேடி வெளியே வரும் மான்கள் வாகனஙகளில் அடிபட்டும், நாய்களிடம் கடி பட்டும் இறப்பது தொடர் கதையாகி வருகிறது.

கங்கைகொண்டான் மான்கள் சராணாலயததில் மான்களுக்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காததாலும், சுற்று சுவர் குறைவாக இருந்து உடைந்துள்ளதாலும் அங்காங்கே மான்கள் எளிதில் வெளியேறி செல்கின்றன.

இவை நான்கு வழிச்சாலையை கடக்கும் வாகனங்களில் மோதி பலியாகி வருகின்றன என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

English summary
Deers in Nellai district came inside the villages and bite by the street dogs. Forest department didn’t take any action ngo’s says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X