For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் கனமழை: நெல்லை, மதுரை, கன்னியாகுமரி ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் - தெற்கு ரயில்வே

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் சென்னையிலிருந்து இயக்கப்படும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரம்பூர், காட்பாடி வழியாக இயக்கப்படுகின்றன.

கனமழையால் தாம்பரம் - விழுப்புரம் இடையேயான ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் வேறு வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

nellai, kanniyakumari trains the detour

புதுடெல்லி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்படும்.

சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

நிஜாமுதின்- கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

சென்னை- திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, போத்தனூர், எர்ணாகுளம் வழியாக இயக்கப்படும்

சென்னை- திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

திருச்சி- கவுரா விரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும்

மதுரை- சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டா மார்க்கமாக இயக்கப்படும்.

திருநெல்வேலி- சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி, ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி- சென்னை குமரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், கரூர், சேலம் மார்க்கமாக இயக்கப்படும்.

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும்

திருவனந்தபுரம்- சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும்.

கவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக மார்க்கமாக இயக்கப்படும்.

குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

English summary
nellai, kanniyakumari trains the detour due to heavy rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X