For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தற்போது சந்து, பொந்தெல்லாம் சாமனியர்கள் கூட பேசி வருகின்ற வார்த்தை "நெட் நியூட்ராலிட்டி".

அதைப்பற்றி ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கினாலும், முக்கால்வாசி பேருக்கு "நெட் நியூட்ராலிட்டி" என்றால் என்ன என்பதே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் உண்மை.

அதனை விளக்கும் வகையிலும், இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு காமெடியான குறும்படத்தை வெளியிட்டுள்ளனர் சென்னை சூப்பர் டிசைன்ஸ் என்ற குழுவினர்.

ஈ ஆடும் ஹோட்டல்:

ஈ ஆடும் ஹோட்டல்:

ஆளே இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் ஹோட்டலில் தொடங்குகிறது கதை, கிட்டத்தட்ட நம்முடைய மொபைல் நிறுவனங்கள் போலவே.

வசமா சிக்கினான்டா:

வசமா சிக்கினான்டா:

அங்கு வந்து சிக்குகின்றார் மேற்படி ஒருவர்... நியூட்ராலிட்டி மாய வலையில் சிக்கி தவிக்கும் பயனாளிகள் போலவே.

உனக்கு சாதம் மட்டும்தான்:

உனக்கு சாதம் மட்டும்தான்:

சர்வர் வந்து இலையப் போட்டுவிட்டு சாதத்தினை மட்டும் போட்டுவிட்டு கம்மென்று எஸ்கேப் ஆகிவிடுகின்றார்... மொபைல் கனெக்‌ஷன் மட்டும் கொடுப்பது போல.

கைல காசு.. வாயில சோறு:

கைல காசு.. வாயில சோறு:

உடனே, சாப்பிட வந்த நம்மவரோ "என்னப்பா கூகுள் ரைஸ் மட்டும் போட்டுருக்க?" என்று சவுண்டு விடுகின்றார். அசால்ட்டாக நடந்து வரும் சர்வரோ, "பேஸ்புக் சாம்பார், வாட்ஸப் வடை, டுவிட்டர் தயிர் எல்லாமே இருக்கு... ஆனா, எல்லாத்துக்கும் தனித்தனி ரேட்" என்கிறார்.

இனி எல்லாம் இப்படித்தான் ஆங்:

இனி எல்லாம் இப்படித்தான் ஆங்:

ஜெர்க்காகிப் போகும் நம்ம ஹீரோ "என்னையா இப்டி சொல்ற?" என்று கேட்பதற்கு "இனிமே எல்லாமே இப்டித்தான் வேணும்னா சாப்டுங்க இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க" என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி பாணியில் தெனாவெட்டாக சொல்கின்றார்.

தம்பி எனக்கு ஊறுகா? – நினைச்சே பார்க்காத:

தம்பி எனக்கு ஊறுகா? – நினைச்சே பார்க்காத:

இதற்கு நடுவில் "மேற்படி" வீடியோக்கள் பற்றிய காமெடி வேறு. "சர்வர் ஸ்லோவோ, பாஸ்ட்டோ வொர்க் பண்ணா எல்லாமே காசுதான்" என்று நம்முடைய இன்டெர்நெட் ஸ்பீடு பத்தியும் சரியான கிண்டல்.

ஆசை மட்டும்தான் மிச்சம்:

ஆசை மட்டும்தான் மிச்சம்:

நம்ம ஹீரோ எண்ணி, எண்ணி காசை வைக்க, வைக்க சாம்பார், பொரியல், கூட்டு என்று வைக்கின்றார் சர்வர். பின்னாடியே "ஆசையைக் காதுல தூதுவிட்டு" என்று பேக்ரவுண்ட் டைமிங் பாட்டு.

காசில்லைனா விக்கியே சாவு:

காசில்லைனா விக்கியே சாவு:

திடீரென்று விக்கல் எடுத்து நம்மவர் தண்ணீர் குடிக்கப் போகும் போது, வேகமாக வரும் சர்வர் "விக்கி வாட்டர் 50 ரூபாய்... எண்ணி வைங்க... இல்லைனா விக்கியே சாவுங்க" என்று எஸ்கேப்..... நம்ம ஹீரோ நிலைமை "அம்பேல்"..

இணையத்தைக் காப்போம்:

இணையத்தைக் காப்போம்:

இந்த நெட் நியூட்ராலிட்டி பிரச்சினை நடைமுறைக்கு வந்தால் இப்படியெல்லாம்தான் நடக்கும் என்று காமெடியாக விவரித்துள்ளனர் குழுவினர். முடிவில் இந்த பிரச்சினை தீர "சேவ் தி இன்டெர்நெட்" போராட்டத்தில் உங்களுடைய கருத்துக்களையும் முன்னெடுத்து வையுங்கள் என்ற மெசேஜுடன் முடிவடைகின்றது வீடியோ.

ஞானம் பொறந்தா சரிதான்:

ஞானம் பொறந்தா சரிதான்:

24 மணி நேரமும் இன்டெர்நெட்டினை நம்பி இருப்பவர்கள் சீக்கிரமே விழிச்சுக்கோங்க... விக்கி வாட்டர் குடிச்சுக்கோங்க!!

English summary
A short film released in YouTube and face book for net neutrality campaign for “save the internet”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X