For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திசை திரும்பிய இயக்குநர் சேரனின் சர்ச்சை பேச்சு.... இயக்குநர் விஜயபத்மாவுடன் மோதல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் விஜயபத்மா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சேரனின் கருத்தை விமர்சித்திருந்தார். இந்த கருத்துகளுக்கு இயக்குநர் சேரனும் (Cheran Pandiyan) பதிலளித்திருந்தார்.

New controversy erupts over Cheran's speech

பின்னர் நேற்று தமது பேச்சு தொடர்பாக சேரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் இந்த பிரச்சனை இப்போது திசை திரும்பி இயக்குநர் விஜயபத்மாவுடன் புது மோதலாக வெடித்திருக்கிறது.

இது குறித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர் எழுதியுள்ளதாவது:

முகநூல் நட்புகளே..இயக்குநர் சேரன் ஈழத்தமிழ் போராட்டத்தில் ஈடுபட்டது அருவெருப்பானது என்று பொது மேடையில் ஈழத்தமிழர்களை தரமிறக்கி பேசியது தவறு என்று பதிவினைப் போட்டேன்.

New controversy erupts over Cheran's speech

அதற்கு காரணம் அவர் கூறிய அதேப் போராட்டங்களில் உணர்வுரீதியாக நானும் பங்கெடுத்துள்ளேன்.அவர் வார்த்தைகள் அவரது சொந்தக் கருத்தாக இல்லாமல் அது சினிமாவிழாவில் பேசப்பட்டதால், எங்களைப் போன்ற உணர்வாளர்களை வேதனைப் படுத்துகிறது.என்பதை நான் வெளிப்படுத்தி சேரன் தன் தவறை உணர்ந்து வார்த்தை களை திரும்பப் பெற்று ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்தேன் இது தவறா?

சேரன் இதற்கு தன் பதிலாக என்னைத் தாக்கி பதில் கொடுத்துள்ளார். இதிலிருந்தே இயக்குநர் சேரன் என்ற போர்வையில் இருக்கும் நபரின் சுயருபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அவர் சில emotional threat போன்ற வார்த்தைகளை இந்தப் பதிவில் உபயோகித்துள்ளார். இப்பொழுது சேரன் என்பவர் யார் என்று உங்களுக்கும் புரிந்து இருக்கும்.

அவரிடம் நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். புதிய தொழில்நுட்பம் வளர வளர அதை வியாபாரமாக மாற்றுவது எப்படி என்று யோசிக்காமல் குறை கூறிக்கொண்டு இருப்பது அறிவீனம்.

இயக்குநர் சகோதரர் சேரன் அவர்கள் பேசிய வார்த்தைகள் என் உறவுகள் என் தமிழ் இனமக்கள் ஈழத்து சகோதர சகோதரிகள் மனதை புண்படுத்தியிருக்கும் என்பதை நான் உணர்வேன்.

அந்த வார்த்தைகளுக்காக எங்கள் திரையுலகம் சார்பாக நான் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன். அவர் வார்த்தைகள் அவர் சொந்த கருத்து.

எங்கள் திரையுலகிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சகோதரர் சேரன் அவர்களே உங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் வைத்து இருக்கிறீர்கள். "சினிமா இல்லாமல் பிழைக்க வேற வழி தெரிந்தால்" என்று என்னைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கு நீங்கள் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். விடமாட்டேன்

இவ்வாறு விஜயபத்மா எழுதியுள்ளார்.

தம் மீதான சேரனின் விமர்சனத்துக்கு ஆதரமாக அவரது கருத்து பதிவையும் விஜயபத்மா படமெடுத்து போட்டிருக்கிறார்.

இந்த பிரச்சனை எங்குபோய் முடியும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கவலை!

ஆடியோ ரிலீசில் இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரனின் 'கன்னா பின்னா' பேச்சு - வீடியோ

English summary
New controversy erupts over Director Cheran's speech on Piracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X