For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் குஷ்பூ 2016... அதுக்குள்ள யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...!!

Google Oneindia Tamil News

சென்னை: நாடோடிகள் படத்தில் ஒரு சீன் வரும்.. போட்டோ எடுப்பார்கள். எடுத்த அடுத்த நிமிடமே டிஜிட்டல் பேனராக காட்சி தரும். அதேபோல குஷ்பு நேற்றுதான் காங்கிரஸில் போய்ச் சேர்ந்தார். ஆனால் பேஸ்புக்கில் அதற்குள்ளாக 2016ல் முதல்வர் குஷ்பு என்ற பெயரில் கடையைத் திறந்து விட்டனர்.

யார் இந்த வேலையைச் செய்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் முன்பு விஜயகாந்த்தை வைத்து வளைத்து வளைத்து ஒரு குரூப் அதகளம் செய்தது நினைவிருக்கலாம். அதே குரூப்தான் இதையும் செய்திருக்காலமோ என்ற சந்தேகம் வருகிறது.

New FB page on Kushboo creates flutter

முதல்வர் குஷ்பூ 2016 என்பதுதான் இந்த பேஸ்புக் பக்கத்தின் பெயராகும். கீழே பொலிட்டீஷியன் என்று போட்டு வைத்துள்ளனர்.

இந்தப் பக்கத்தின் கவர் படமாக சோனியா காந்தியை குஷ்பு சந்தித்த படத்தைப் போட்டு வைத்துள்ளனர். கூடவே ஈவிகேஎஸ் இளங்கோவனும் கை கட்டியபடி இருக்கிறார்.

புரபைல் படம் சற்று இளமையாக இருக்கிறது. அழகாக காட்சி தருகிறார் குஷ்பு.

இந்தப் பக்கத்தில் போடப்பட்ட முதல் பதிவே அசத்துகிறது. அதாவது, சற்று முன்பு குஷ்பூ நமது நாட்டுக்கு விடுதலை வாங்கி குடுத்த காந்திய கட்சியாம் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மக்களுக்கு தொண்டாற்ற முனைந்துள்ளார் ..இவரை 2016 இல் தமிழக முதல்வாராக முன் நிறுத்தி களம் இறங்க செய்ய தமிழர்கள் எல்லாம் ஒன்றுகூடி .. வாங்க வாங்க .. உங்களுக்கு என்ன தோனு தோ எழுதுங்க .. என்று எழுதியுள்ளனர்.

இந்த வாக்கியத்தைப் பார்த்தாலே பயந்துதான் வருகிறது. கருத்துக்கள் எப்படியெல்லாம் களை கட்டப் போகிறதோ என்ற அச்சத்தில்.

அடுத்து இன்னொரு பதிவு. அதில், கருணாநிதிக்கு குஷ்பு பொன்னாடை அணிவிக்கும் படத்தைப் போட்டு அதற்கு மேலே, கையை விரிச்சு காமிச்சேன் .. உங்க வீட்டு பொம்பளைங்க என்னைய விரட்டி விட்டுடாங்க .. இப்போ கையை குவிச்சு காமிக்கபோறேன்.. தாதா ... டா டா ..என்று போட்டு வைத்துள்ளனர்.

சந்தேகமே இல்லை.. இது விஜயகாந்த்தை டபாய்த்த அதே குரூப் போலத்தான் தெரிகிறது!

English summary
A new page in FB has created flutter in political circle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X