For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாய்ராம் டிவி பார்த்தீகளா, மீனாட்சி டிவி பார்த்தீகளா?... புதிதாய் பிறந்த 2 டிவி சேனல்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: கல்வித்தந்தைகள் அனைவரும் தொலைக்காட்சி நிறுவன அதிபர்களாகி வருகின்றனர். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தைப்போல மேலும் இரண்டு கல்வி நிறுவனங்களில் இருந்து டிவி சேனல்கள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தொலைக்காட்சி பெருகி வரும் இந்நாளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சேனல் டிஆர்பி ரேட்டிங் மற்றும் வாடகை போன்ற ஒரு சில விஷயங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறிது மாதங்களில் காணமல் போய் விடுகின்றனர்.

New Tamil channels Sairam TV and Meenakshi TV will start soon

ஆனாலும் தமிழ்மொழியில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படுவதன் ஆர்வம் குறையவேயில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சனல்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு ஆய்வின் முடிவில் இந்தி சேனல்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தொலைக்காட்சிகளை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு என ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பிற மொழிகளுக்கு அடுத்து ,தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகளுக்கான அனுமதியை இந்திய அரசு கீழ் செயல்படும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் 2014 ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

சென்னையில் இயங்கிவரும் பெரிய கல்வி நிறுவனமான சாய்ராம் கல்வி மற்றும் மீடியா குழுமத்தின் சார்பாக புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி "சாய்ராம்டிவி" என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ளது. இதே போன்று மீனாட்சி மீடியா குழுமத்தின் சார்பாகவும் மீனாட்சி டிவி என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ளது.

ஏற்கனவே எஸ்.ஆர்.எம்.கல்வி நிறுவனங்கள் சார்பில் 3 தொலைக்கட்சிகள் வரிசையில் இந்த கல்வி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

English summary
Two new TV channels Sai Ram and Meenakshi TV will start soon for Tamil viewers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X