புதுக் கணவர் மீது செக்ஸ் புகார் கூறிய மனைவி.. தாலியையும் கழற்றிக் கொடுத்தார்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

ஆரணி: புதிதாக திருமணமான பெண் தனது தாலியை கழற்றி கணவர் கையில் கொடுத்து விட்டு போய் விட்டார். பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அவர் தனது புதுக் கணவர் செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் கூறியுள்ளார்.

ஆரணி அசோகன் என்பவரது மகள் அம்மு. 21 வயதான இவருக்கும் காமக்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள்தான் ஆகிறது திருமணமாகி.

கடந்த 17ம் தேதி சுரேஷ் தனது மனைவியை ஆரணிக்கு கூட்டி வந்தார். அப்போது திடீரென தனது தாலியைக் கழற்றி கணவர் கையில் கொடுத்து விட்டு வேகமாக போய் விட்டாராம் அம்மு. இதனால் குழப்பமடைந்த சுரேஷ், ஆரணி போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில்நேற்று மாலை ஆரணி காவல் நிலையத்திற்கு வந்தார் அம்மு. அங்கு தனது கணவர் மீது புகார் கூறினார். அதாவது திருமணமானது முதல் தனக்குக் கணவர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், இதனால்தான் ஆரணி வந்தபோது அங்கிருந்து மேல்மருவத்தூர் போய் விட்டதாகவும் கூறினார்.

இந்த புகாரால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். சுரேஷிடம் விசாரணை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற முடிவுக்கு தற்போது போலீஸார் வந்துள்ளனராம்.

English summary
A newly married woman slapped a sexual torture complaint against husband in Arani.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement