For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரசவத்தின்போது இறக்கும் பெண்கள்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அதிகம்!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு அதிகமாக இருப்பதாக சுகாதார திட்ட இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் சிசு சிகிச்சை தொடர்பாக 8 மாவட்ட மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் தஞ்சையில் நடந்தது.

Nine districts in Tamil Nadu having higher pregnancy deaths…

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குனர் சண்முகம் தலைமை வகித்தார். தஞ்சை கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலம் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 90 என்று குறைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 128 ஆகும். தமிழகத்தில் கரூர், மதுரை, திருநெல்வேலி, தேனி, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் 90க்கும் அதிகமாக உள்ளது என்றார் அவர்.

English summary
Tanjore district conducts a special conference for the health official to know about facilities for pregnant ladies in district hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X