For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி.. காவலர்கள் விடுமுறை எடுக்க தடை - டிஜிபி உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 17-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 10 மாநகராட்சி, 64 நகராட்சி, 255 பேரூராட்சி, 193 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டு, 3250 ஊராட்சி ஒன்றிய வார்டு, 50,640 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 6444 கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடக்கும்.

 no holiday for Tamil Nadu Police

இரண்டாம் கட்ட தேர்தலின்போது சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சி, 60 நகராட்சி, 273 பேரூராட்சி, 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டு, 3221 ஊராட்சி ஒன்றிய வார்டு, 48,684 கிராம பஞ்சாயத்து வார்டு, 6080 கிராம பஞ்சாயத்துத் தலைவர்களை தேர்ந்து எடுக்க வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள காவலர்களின் விடுப்புகளை உடனடியாக ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ விடுப்பில் உள்ளவர்களை மருத்துவக்குழு முன் ஆஜர்படுத்தி பரிசோதனை செய்யும் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
tamilnadu local body election 2016: tamilnadu DGP orders, no holiday for Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X