For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பிரச்சினைகளில் ஒரு கட்சிக்கும் உண்மையான அக்கறை கிடையாது.. ஒன்இந்தியா வாசகர்கள் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பிரச்சினைகள் குறித்து தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் உண்மையான அக்கறை கிடையாது என்று உரத்த குரலில் சொல்லியுள்ளனர் ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள்.

வேறு எந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தைத்தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் வாட்டி வதைக்கின்றன. வாழ்க்கையே போராட்டம் என்றாகி விட்டது தமிழக மக்களுக்கு. எந்தப் பிரச்சினைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வு கிடைக்காமல் மக்கள் அல்லாடிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பிரச்சினைகளில் எந்தக் கட்சிக்கு அதிக அக்கறை உள்ளது என்று கேட்டிருந்தோம். ரிசல்ட் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆம், எந்தக் கட்சிக்குமே உண்மையான அக்கறை கிடையாது என்பதே நமது வாசகர்களின் ஆணித்தரமான தீர்ப்பாக வந்துள்ளது.

மோசமான ஆளுங்கட்சி 0.67%

மோசமான ஆளுங்கட்சி 0.67%

இதுதான் நமது வாசகர்களிடம் நாம் கேட்ட கேள்வி. அதற்கு கிடைத்த வாக்குகள் 34,517 ஆகும். இதில் மோசமான ஆதரவைப் பெற்றுள்ள கட்சி.. சாட்சாத் நம்ம ஆளுங்கட்சியேதான்.. அதாவது அதிமுக எடப்பாடி. இக்கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு வெறும் 0.67 சதவீதம்தான்.

காங்கிரஸ் 1.49%

காங்கிரஸ் 1.49%

காங்கிரஸ் கட்சிக்கு 515 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது மொத்த வாக்குகளில் 1.49 சதவீத ஆதரவு இக்கட்சிக்குக் கிடைத்துளளது.

திமுக 18.43%

திமுக 18.43%


திமுகவுக்கு தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் 2வது இடமும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 3வது இடமும் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு கிடைத்துள்ள ஆதரவு 18.43 சதவீதம். அதாவது 6361 வாக்குகள்.

பாஜக 3,23%

பாஜக 3,23%

பாஜகவுக்கு தமிழக பிரச்சினைகளில் உண்மையான அக்கறை உள்ளது என்பதற்கு கிடைத்துள்ள ஆதரவு 3.23 சதவீதமாகும். அதாவது 1116 வாக்குகள் கிடைத்துள்ளன.

பாமக 5.05%

பாமக 5.05%

பாமவுக்கு 1743 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 5.05 வாசகர்களின் வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றுள்ளது.

அதிமுக ஓ.பி.எஸ் 2.38%

அதிமுக ஓ.பி.எஸ் 2.38%

ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வாசகர்கள் மத்தியில் 2.38 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 823 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியை விட இக்கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

தேமுதிக 1.61%

தேமுதிக 1.61%

தேமுதிக மீது வாசகர்களிடையே நம்பிக்கை இல்லை போலும். வெறும் 1.61 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. அதாவது 557 வாக்குகளே இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

மக்கள் நலக் கூட்டணி 1.12%

மக்கள் நலக் கூட்டணி 1.12%

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு 1.12 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. வாக்குகள் எண்ணிக்கை 386 ஆகும்.

நாம் தமிழர் 20.37%

நாம் தமிழர் 20.37%

நாம் தமிழர் கட்சிக்கு தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது. இக்கட்சிக்குக் கிடைத்துள்ள ஆதரவு 20.37 சதவீதமாகும். அதாவது 7030 வாக்குகள் ஆகும்.

மற்ற கட்சிகள் 0.59%

மற்ற கட்சிகள் 0.59%

இந்தக் கட்சிகள் அல்லாமல் மற்ற கட்சிகள் என்று ஆதரவு தெரிவித்துள்ளோர் எண்ணிக்கை 0.59 சதவீதமாகும். அதாவது 204 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

யாருக்குமே உண்மையான அக்கறை கிடையாது 44.21%

யாருக்குமே உண்மையான அக்கறை கிடையாது 44.21%

இதுதான் மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. எந்தக் கட்சிக்குமே உண்மையான அக்கறை கிடையாத என்று 44.21 சதவீத வாசகர்கள் அடித்துக் கூறியுள்ளனர். மொத்தமாக 15,259 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

எல்லோருக்குமே அக்கறை உண்டு 0.85%

எல்லோருக்குமே அக்கறை உண்டு 0.85%

எல்லா கட்சிகளுக்குமே தமிழக பிரச்சினைகள் குறித்து அக்கறை இருக்கத்தான் செய்கிறது என்று கூறியுள்ள வாசகர்களின் எண்ணிக்கை 0.85 சதவீதமாகும். அதாவது 293 வாக்குகள் கிடைத்துள்ளன.

English summary
In an opinion poll conducted by the Oneindia Tamil, our reader have said that No party has genuine interest in solving TN people's issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X