For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகிழக்கு பருவமழை 27ம் தேதி வரை வர வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சமீபத்தில் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவானது.இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டன.

Northeast Monsoon remains subdued, no revival soon

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி நகர்ந்து வருவதால்,தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை பெருமழை பெய்ய வாய்ப்பு இல்லை என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 28ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் முதலில் கடலூரை துவம்சம் செய்தது மழை. மெல்ல மெல்ல தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை புரட்டிப் போட்டது.

காற்றின் போக்கில் மாற்றம் ஏற்படாததால், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால், காற்று அந்தப் பகுதியை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறது. அதனால் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதமாகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தாமதமாவதால் தீபாவளிக்கு மழையின்றி பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ள வானிலை ஆய்வுமையம்.

English summary
This Diwali is going to be rain free in most places in Tamil Nadu says Met office.The normal onset date of Northeast Monsoon over Tamil Nadu is around October 18. However, rains have been subdued over Tamil Nadu till now as Northeast Monsoon is yet not make an onset over the coastal state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X