ரஜினி மட்டுமல்ல... யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் கனிமொழி கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரின் ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில், ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

Not only Rajini, anyone can come to politics says Kanimozhi

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலை சரியில்லாததால், துணைத்தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

விழாவுக்கு வருபவர்களுடைய விபரங்களை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார். ஜனாதிபதி வருவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம், இது ஜனநாயக நாடு. " என்று கூறினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Not only Rajini, anyone can come to politics says Kanimozhi today at Chennai Airport.
Please Wait while comments are loading...