For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த நாரதர் கலகத்துக்கு அடிபோடும் பாஜக... ஸ்டாலின் மீது கடுப்பாம்... கனிமொழி மீது கரிசனமாம்!

அதிமுகவைத் தொடர்ந்து திமுகவில் கலகம் விளைவிக்கும் வேலைகளில் களமிறங்கியுள்ளது பாஜக.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சிதறடித்து வரும் பாஜகவின் கவனம் இப்போது திமுகவின் பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீது பாஜக ரொம்பவே கரிசனம் காட்டுகிறது என்கிற தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பாஜக காலூன்ற தடையாக இருப்பது அதிமுகவும் திமுகவும்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்கு குறிவைத்தது பாஜக.

அதிமுக

அதிமுக

இதனால் தற்போது அதிமுக சிதறுண்டு போயுள்ளது. அதிமுகவை கைப்பற்ற நினைத்த சசிகலாவும் தினகரனும் சிறைக்கு போய்விட்டனர்.

பாஜகவின் கணக்கு

பாஜகவின் கணக்கு

சசிகலா, தினகரனை சிறைக்கு அனுப்பிவிட்டு அதிமுகவை ஒன்றுபட வைக்கிறது பாஜக. இப்படி செய்வதின் மூலம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியும்; அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் காலூன்றவும் முடியும் என்பது பாஜக கணக்கு.

திமுகவுக்கு குறி

திமுகவுக்கு குறி

இதே வேகத்தில் திமுக பக்கமும் பார்வையை திருப்பியுள்ளது பாஜக. முதல் கட்டமாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கனிமொழிக்கு ஆதரவாகவும் கருத்துகளை பரப்பும் வேலையை உளவுத்துறை கையிலெடுத்துள்ளது.

கனிமொழி மீது கரிசனமாம்

கனிமொழி மீது கரிசனமாம்

அதாவது பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் பலமுறை நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்து வருவதாகவும் ஒரு தகவல். அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் கனிமொழியை பார்க்கும் போதெல்லாம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டு பரிவாக பேசுகிறார் மோடி என்பது இன்னொரு தகவல்.

கனிமொழி தலைமையில் கலகம்?

கனிமொழி தலைமையில் கலகம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டாலின் தலைமையை ஏற்காத திமுக மாவட்ட செயலாளர்களை கனிமொழி ஒருங்கிணைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படி தொடர்ந்து பரப்பப்படும் செய்திகளால் திமுகவிலும் 'ஓட்டையை' போட்டு ஆட்டைய போட முடியுமா? என்பதுதான் பாஜகவின் திட்டம் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

English summary
Delhi sources said that after the ADMK now BJP targetted to DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X