For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக்கிலீக்ஸை விஞ்சும் சசி குடும்பத்து லீலைகள்- அதிகாரப் போட்டியில் அம்பலம்!

தங்களுக்கு இடையேயான அதிகாரத்துக்கான குடும்பிடி சண்டையில் சசிகலா குடும்பத்தின் அதிர்ச்சி லீலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா குடும்பத்து குடுமிபிடி சண்டையில் இதுவரை வெளியாகாத சசிகலா குடும்பத்தின் அக்கப்போர் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திவாகரன் மகனும் இளவரசி மகனும் ஃபேஸ்புக்கில் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக, 'சட்டம் படிக்காத விவேக், படித்ததாக சொல்லி வருகிறார்' என ஜெயானந்த் தரப்பில் கிளப்பிவிட்டுள்ளனர்.

இதனால் கொதிப்பில் இருக்கிறார் இளவரசி மகன் விவேக் ஜெயராமன். தினகரன் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சசிகலாவைத் தவிர, வேறு யாரும் அ.தி.மு.கவில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம். சில மாதங்களுக்கு முன்பே இதை நாங்கள் வலியுறுத்தினோம். அமைச்சர்கள் எடுத்த முடிவு தாமதம் என்றாலும், அறிவுப்பூர்வமான முடிவு' என ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்.

ஜெயானந்த் திருமணம் கசிவு

ஜெயானந்த் திருமணம் கசிவு

இதற்குப் பதில் கொடுத்த விவேக், 'சின்னம்மா இல்லாத கழகம் சுக்குநூறாக உடைந்து சிதறிவிடும். இப்படியொரு முடிவால் கட்சிக்குத்தான் ஆபத்து' எனப் பதில் கொடுத்தார். தினகரனுக்கு எதிராக திவாகரன் வாரிசு நேரடியாக களத்தில் இறங்கியதைக் கண்ட விவேக் தரப்பினர், 'தினகரன் தம்பி பாஸ்கரனின் மகளைத்தான் ஜெயானந்த் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்' எனத் தகவல் பரப்பினர்.

சட்டப்படிப்பில் மோசடி?

சட்டப்படிப்பில் மோசடி?

குடும்ப ரகசியத்தை வெளியில் சொன்னதால் கொதித்த ஜெயானந்த் தரப்பினர், 'சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழத்தில் சட்டப்படிப்பு படிப்பில் சேர்ந்து, ஓராண்டு படிப்பை முடித்து விட்டார். ஆனால், அவர் சட்டப்படிப்பில் தேர்ச்சியே பெறவில்லை. பல்கலைக்கழகத்துக்கே அவர் வந்ததில்லை. ஆனால், சட்டம் படித்ததாகக் கூறி வருகிறார். இதுகுறித்து ஆளுநருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு இருந்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்ற தகவல் கசியவிடப்பட்டது.

எப்ப நான் சட்டம் படிச்சேன்?

எப்ப நான் சட்டம் படிச்சேன்?

'சட்டம் படித்ததாக மோசடி செய்கிறார் விவேக்' என்ற தகவல்கள் வெளியானதை அடுத்து, குடும்ப உறவுகளிடம் பேசிய விவேக், "இதுபோன்ற காரியத்தை ஜெயானந்த் தரப்பினர்தான் செய்து வருகின்றனர். எம்.பி.ஏ முடித்துவிட்டு, ஐ.டி.சியில் வேலை பார்த்து வந்தேன். அம்மா அழைத்ததால்தான், சென்னைக்கு வந்தேன். நான் சட்டம் படித்ததாக எந்த இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். என் பெயருக்குப் பின்னால் பி.எல் என்ற பட்டத்தை எப்போதுமே போட்டுக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போது மோசடி செய்தேன் எனத் தகவல் பரப்புவது கொஞ்சமும் சரியல்ல. இப்படியொரு தகவல் யார் பரப்பினார்கள் என்பதைக் கண்டறிந்து, சட்டரீதியாகவே நடவடிக்கை எடுப்பேன் எனக் கொதித்திருக்கிறார்.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

இப்படியான குடுமிபிடி சண்டையால் ஜெயலலிதா-சசிகலா பேசிய வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என திவாகரன் மகன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியிடுவது உள்ளிட்ட பல விவகாரங்கள் வீதிக்கு வரத் தொடங்கியுள்ளன. அணிகள் இணைவதற்குள் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ எனக் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

English summary
After the oust of TTV Dinakaran, now Sasikala family members fought each other in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X