For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: டிடிவி தினகரனுக்கு எதிராக இணைந்த ஓ.பி.எஸ்- எடப்பாடி! திரைமறைவில் நடக்குது பேச்சுவார்த்தை

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல அதிரடிகளை நடத்த ஓபிஎஸ்-இபிஎஸ் இரு தரப்புமே திட்டமிட்டு வருகிறது என்கிறார்கள் இருதரப்பும் இணைவதற்கான முயற்சியை எடுப்பவர்கள்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரன் ஆதிக்கம் செலுத்துவதை ஒடுக்க, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக அரசின் ஆயுள் காலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்கிறது என்பதால் எடப்பாடி முதல்வரானதும் அவரை விட அதிக ஆனந்தமடைந்தது அவரது சமூகத்தை சார்ந்த தொழிலதிபர்களும், அதிகாரிகளும் தான்.

எந்த சூழலிலும் 4 ஆண்டு கால வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டார் எடப்பாடி. சசிகலா சிறைக்கு சென்றதும் இனி 4 ஆன்டுகளுக்கு நமக்கு ஆபத்து இல்லை என தெம்பாகவும் இருந்தார்.

இடைத் தேர்தலில் போட்டி

இடைத் தேர்தலில் போட்டி

ஆனால், இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதாக அவர் அறிவித்துக்கொண்டதும், வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவியில் மாற்றமில்லை எனவும் தினகரனே சொன்னது தான் எடப்பாடிக்கு உதறலைக் கொடுத்தது. சசிகலாவின் விருப்பத்திற்கு எதிராக டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் களமிறங்குவதாகவும் கூறப்பட்டது.

திட்டம்

திட்டம்

எடப்பாடி சந்தேகப்படுவது போல, தினகரன் ஜெயித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று கொங்கு சமூக அதிகாரிகளும் நினைத்தார்கள். ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என ஆலோசித்த நிலையில் எடப்பாடி ஒரு திட்டத்தை உருவாக்கினார்.

ஓ.பி.எஸ் அணி

ஓ.பி.எஸ் அணி

தினகரனின் நடவடிக்கைகளும் அதிகாரமும் அதிமுகவில் அழுத்தமாக பதிவாகி வருவதை கவனித்தபடி இருந்தது ஓ.பி.எஸ். டீம். தினகரனின் நேரடி ஆளுமைக்குள் ஆட்சி அதிகாரம் செல்லுமானால் கட்சியும் அவரிடமே அடைக்கலமாகும் . அப்படி நடந்தால் தனது எதிர்கால அரசியல் கேள்விகுறியாகும் என யோசித்தார் ஓ.பி.எஸ்.!

இணைய முடிவு

இணைய முடிவு

இந்த சூழலில் தான், ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்சும் இணைந்தால் மட்டுமே சசி மற்றும் அவரது உறவுகளை அரசியலில் இருந்து துரத்த முடியும் . அது நடந்தால் தன் தங்களிண் அரசியல் நிலைக்கும் என முடிவு செய்தனர். அதற்கு இருவரும் இணைய வேண்டும். இணைந்தால் கட்சி ஆட்சி இரண்டையும் தினகரனிடம் செல்லாமல் பாதுகாக்க முடியும் என யோசித்தனர் அதிகாரிகள்.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இதனையடுத்து இரு தரப்புக்கும் வேண்டப்பட்ட சில அதிகாரிகள் இதற்கான முயற்சியை ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்தனர். ஓபிஎஸ்சிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அவரும் அந்த மனநிலையிலேயே ( ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு அவரிடம் எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால்) இருந்ததால் முதல்கட்ட பேச்சுவார்த்தையை ஆரோக்கியமாக எடுத்துக்கொண்டார்.

சின்னம் முடங்க திட்டம்

சின்னம் முடங்க திட்டம்

இதன் முதல்கட்டமாக , இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் பரவாயில்லை, தினகரனுக்கு சின்னம் கிடைத்துவிடக்கூடாது. சின்னம் தினகரனுக்கு கிடைக்கக்கூடாது என பா.ஜக.வும் நினைப்பதால் இதை சாதித்துவிடமுடியும் என கணக்கிட்டனர். அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. அதேபோல, இடைத்தேர்தல் முடிவுகள் தினகரனுக்கு தோல்வியை தரவேண்டும். அதன் முடிவு தெரிந்த பிறகு இரு தரப்பும் இணைவதில் சீரியஸ் காட்டலாம் என ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

அதிரடி காத்திருக்கிறது

அதிரடி காத்திருக்கிறது

அந்த வகையில் முதல் பாயிண்ட் வெற்றி. இனி தேர்தல் முடிவும் தாங்கள் நினைப்பது போல வெற்றியை தரும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல அதிரடிகளை நடத்த இரு தரப்புமே திட்டமிட்டு வருகிறது என் கிறார்கள் இருதரப்பும் இணைவதற்கான முயற்சியை எடுப்பவர்கள்.

English summary
O.Pannerselvam and Edappadi Palanichami decides to join their hands against T.T.V.Dinakaran, says AIADMK sources to Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X