For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமே... ஒன்இந்தியா வாசகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மது விலக்கு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமே என்று ஒன்இந்தியா தமிழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் நிச்சயம் இது சாத்தியமே. முயற்சித்தால் இதை அமல்படுத்த முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடிகாரர்களே திருந்தினால்தான் உண்டு என்றும் கணிசமானோர் கூறியுள்ளனர்.

மது விலக்கு சாத்தியமா

மது விலக்கு சாத்தியமா

தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமா என்று வாசகர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு இதுவரை கிடைத்துள்ள வாக்குகள் 14,719 ஆகும்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

மது விலக்கு சாத்தியமில்லை என்று 14.65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 2156 வாக்குகள் இதற்கு கிடைத்துள்ளன.

நிச்சயம் அமல்படுத்த முடியும்

நிச்சயம் அமல்படுத்த முடியும்

நிச்சயம் மது விலக்கை அமல்படுத்த முடியும் என்று 23.77 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 3498 வாக்குகள் கிடைத்துள்ளன.

குடிக்க வைத்து கெடுத்து விட்டனர்

குடிக்க வைத்து கெடுத்து விட்டனர்

குடிக்க வைத்து கெடுத்து விட்டனர். எப்படி சாத்தியமாகும் என்று வருத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1559 ஆகும். அதாவது 10.59 சதவீதம் பேர் இப்படி ஆதங்கப்பட்டுள்ளனர்.

குடிகாரர்களே திருந்தினால்தான் உண்டு

குடிகாரர்களே திருந்தினால்தான் உண்டு

குடிகாரர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு என்று கருத்துக் கூறியோர் எண்ணிக்கை 18.67 சதவீதம் ஆகும். அதாவது 2748 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

முயற்சித்தால் அமலாக்கலாம்

முயற்சித்தால் அமலாக்கலாம்

அரசு முயற்சித்தால் இதை அமல்படுத்த முடியும் என்ற கருத்தை சொல்லியிருப்போர் 32.33 சதவீதம் பேர். அதாவது 4758 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

English summary
Oneindia Tamil readers have hoped for total prohibition is possible in the state in a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X