For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யோ பரிதாபமே! தினகரனைப் பார்க்க ரெண்டே ரெண்டு பேர்தான் ஏர்போர்ட் வந்தாங்களாமே!

விசாரணைக்காக சென்னை கொண்டு வரப்பட்ட டிடிவி தினகரனைப் பார்க்க இரண்டு அதிமுககாரர்கள் மட்டுமே விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை : இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், கூடுதல் விசாரணைக்காக விமானம் மூலம் டிடிவி தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்பட்டார்.

 கூட்டம்

கூட்டம்

ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டு விமான நிலையத்தில் வந்தால், அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரைக் காண அலை மோதுவார்கள். அந்த இடமே ஸ்தம்பித்துவிடும்.

ரெண்டே பேர்

ரெண்டே பேர்

ஆனால், தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னை கொண்டு வந்த போது, விமான நிலையத்தில் அவரைக் காண இரண்டே இரண்டு அதிமுக நிர்வாகிகள்தான் காத்துக்கிடந்தார்கள்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

தினகரன் என்ன செய்தாலும் அதனை சரி என்று வாதிட்டு, அதற்காக முகத்தில் யார் எச்சில் துப்பினாலும் துடைத்துக் கொள்வேன் என்று சொன்ன அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்தான் தினகரனைக் காண விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்த ஜீவன்.

மற்றொருவர்

மற்றொருவர்

அடுத்ததாக, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி. இவர், டிடிவி தினகரனின் உயர்ந்த நோக்கத்தை கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கட்சி பிளவுபட்டிருந்த போது வாதிட்டவர். தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக கட்சியில் செயல்பட்டு வருபவர்.

பாவம் தினகரனின் நிலை..

English summary
Nanjil Sampath and Pugazhenthi visited Chennai Airport to see Dinakaran today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X