For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி… வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.15 கோடி மட்டுமே!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசு, வேலையில்லா பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வெறும் 2015-16ஆம் நிதியாண்டில் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்

OPS announces Rs 90 cr for temples renovation
  • பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு.
  • அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி.
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களில் விரிவுபடுத்தப்படும்.
  • சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி.
  • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.140.12 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மக்கள் நலவாழ்வு திட்டத்திற்கு ரூ.8245 கோடியாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
  • முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.
  • மகளிர் சுகாதார திட்டத்திற்கு ரூ.60.58 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஏழை கர்ப்பிணி பெண்களின் நலவாழ்வு திட்டத்திற்காக ரூ.668.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
  • கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை கிராம இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • லட்சம் பேருக்கு தொழில் திறன் பயிற்சி. தகவல் தொழில்நுட்பத்திற்கு ரூ.82.49 கோடி.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு. கைத்தறி விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி மானிய திட்டம் தொடரும்.
  • 2015 -16 நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்புகளைத் தவிர மேலும் பல முக்கிய திட்டங்களையும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

English summary
TN govt has allocated Rs 90 crore for temple renovation in the budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X