For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்... ஓ.பி.எஸ்.-க்கு செம ஆதரவு- சசிகலாவுக்கு தகுதி இல்லை- ஜூ.வி. சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை எனவும் ஜூனியர் விகடன் சர்வே தெரிவிக்கிறது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. பின் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த காலம் முதல் அக்கட்சியின் சகலமுமாக இருப்பவர் ஜெயலலிதா மட்டுமே.

அவ்வப்போது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார்? என்ற கேள்வி வரும்போதெல்லாம் அந்த இடத்துக்கு அடிபடுகிறவர் கட்சியில் நிலைத்ததாக இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்தது சசிகலாவா? அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்ற நிலை அ.தி.மு.க.வில் உள்ளது.

ஜூவி சர்வே

ஜூவி சர்வே

இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு ஒரு சர்வே நடத்தி உள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் நடத்தப்பட்டது இந்த கருத்துக் கணிப்பு.

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38.41% பேர் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வரத் தகுதியானர் ஓ.பி.எஸ். என கூறியுள்ளனர். அதாவது மொத்தம் 6,470 பேர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டலத்தில்...

மதுரை மண்டலத்தில்...

ஓ.பி.எஸ்.க்கு அவரது மதுரை மண்டலத்தில் 2,131 பேரும் சென்னை மண்டலத்தில் 2,063 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சசிக்கு தகுதி இல்லை

சசிக்கு தகுதி இல்லை

அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வர சசிகலாவுக்கு தகுதி இல்லை என 93% பேர் கூறியுள்ளனர். மொத்தம் 7.25% பேர்தான் (1,222) சசிகலாவுக்கு தகுதி இருப்பதாக கூறியுள்ளனர்.

"இன்னொருவரு"க்கு 54% ஆதரவு

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அல்லாமல் இன்னொருவரை அதிகம் பேர் விரும்புவதாகவும் கூறுகிறது இந்த கருத்து கணிப்பு.

அதாவது "மற்றவர்கள்" என்ற ஆப்சனுக்கு 54% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது ஜூ.வி. சர்வே.

English summary
According to Junio Vikatan magazine survey said that, State Minister O Panneselvam got 38.41% support as Next ADMK leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X