விசுவாசத்தின் மறு உருவம் ஓபிஎஸ்.... ஓரே போடாக போட்ட ஆர்பி உதயக்குமார்!

விசுவாசத்தின் மறு உருவம் ஓபிஎஸ் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசுவாசத்தின் மறு உருவம் ஓபிஎஸ் தான் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸை பார்த்துதான் நாங்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டோம் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் அமைச்சர் உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விசுவாசத்தின் மறு உருவம் ஓபிஎஸ்தான் என அவர் கூறினார்.

விசுவாசம் என்றால் ஓபிஎஸ் தான் என்று கூறிய அவர், ஓபிஎஸை பார்த்துதான் நாங்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டோம் என்றும் கூறினார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓபிஎஸ் விசாரிக்கப்படும் என்று கூறியதால் தான் கருத்து வேறுபாடு ஏறபட்டது என்றும் அவ்ர தெரிவித்தார்.

ஓபிஎஸ் மீது விமர்சனம் இல்லை

மற்றபடி ஓபிஎஸ் மீது எங்களுக்கு எந்த விமர்சனமும் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு இரட்டை இலை முக்கியம் என்று கூறிய உதயகுமார், அதனை பெற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போதே சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்று ஓபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் உதயக்குமார்.

விசுவாசத்தின் மறு உருவம்

கட்சிப்பொறுப்பும் ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என வார்த்தைக்கு வார்த்தை சின்னமாக புகழ்பாடியவர் அமைச்சர் உதயகுமார். இந்நிலையில் தற்போது விசுவாசத்தின் மறு உருவேம் ஓபிஎஸ்தான் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தடாலடியாக மாறியுள்ளார்

சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்குவதாக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஓபிஎஸை ஒரே அடியாக புகழ்ந்து தடாலடியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Uthayakumar says that OPS is the embodiment of the gratitude. he said we learnet from OPS that how to be gratitude.
Please Wait while comments are loading...