ஜெ., சுகவீனம்: தேனியில் இருந்து சென்னைக்கு விரைந்த ஓபிஎஸ்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி சென்றிருந்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவர் முதல்வரை சந்திக்க மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே 9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இன்று காலை ஒன்பது மணிமுதல் கீரிம்ஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்துள்ளனர்.

OPS rushes to Apollo hospitals to meet CM Jayalalit

கிரிம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. இதுவரை மருத்துவமனை வெளியே காக்கவைக்கப்பட்ட அமைச்சர்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில், சில அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவைக் காண மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். தொண்டர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Minister O Panneerselvam has rushed to Chennai to meet ailing Chief Minister Jayalalitha.
Please Wait while comments are loading...

Videos