ஈபிஎஸ்க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்... அரசைக் கண்டித்து ஆக.10ல் ஆர்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை, டெங்கு பாதிப்பு, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPS to stage protest on August 10

ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆளும் கட்சிக்கு எதிராக ஏற்கனவே உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியுள்ளார் ஓபிஎஸ்.

ஆளும் அரசை ஊழல் அரசு என்று பகிரங்கமாக விமர்சித்தார் ஓபிஎஸ். கூவத்தூர் விடுதியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தநிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார். மொத்தத்தில் எதிர்கட்சி போல செயல்படத் தொடங்கியுள்ளார் ஓபிஎஸ். அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.

Minister C V Shanmugam Slammed OPS-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
ADMK Purachi Talaivi Amma team leader O.Pannerselvam announce a massive protest on August 10 against TamilNadu government.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்