For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடைகிறது ஓபிஎஸ் அணி... டாட்டா காட்ட தயாராகிறார் நத்தம் விசுவநாதன்

ஓபிஎஸ் அதிமுக அணியிலிருந்து நத்தம் விசுவநாதன் வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா அணி அதிமுக, டிடிவி தினகரன் அணி அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று அணிகள் பல கண்ட நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியேறுகிறார்.

அங்க சுற்றி இங்க சுற்றி இப்போது ஓபிஎஸ் அணியிலும் கருத்துமோதல்கள், முட்டல் விவகாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது சசிகலாவையே எதிர்க்க துணிந்த ஓபிஎஸுக்கு கொஞ்சம் ஜெர்க் கொடுத்துள்ளது என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.

சசிகலாவை தைரியமாக எதிர்க்க முடிந்த பன்னீருக்கு தனது அணியில் பெருகிவிட்ட அதிருப்தியை சமாளிக்க முடியவில்லை என்றும், அதனால் தான் அவர் மூலிகை ரெஸ்டுக்கு சென்றுவிட்டார் என்றும் கூறுகிறார்கள் அதிமுகவில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும் இப்போது பிரிந்து செயல்படுகிறது.

 பெருகாத ஆதரவு

பெருகாத ஆதரவு

பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து சசிகலாவிடமிருந்து பிரிந்து வந்தனர். இதன் பிறகு ஓபிஎஸ் தரப்புக்கு வேறு எம்.எல்.ஏ. அல்லது எம்பிக்கள் , மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் வரவில்லை. இதில் ஓபிஎஸ் அணி அப்செட் ஆகியுள்ளது.

 வெறுப்பில் நத்தம்

வெறுப்பில் நத்தம்

அதிமுக தொண்டர்களின் பலத்தை முழுமையாக என்பக்கம் இழுத்துவிடுகிறேன் என்று சபதமிட்ட ஓபிஎஸ், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். காஞ்சிபுரம், சேலம் , விழுப்புரம் என்று தமக்கு சாதகமான இடங்களில் கூட்டம் கூட்டினார். திண்டுக்கல்லிலும் கூட்டம் நடத்தினர். அதற்கு அடுத்த நாள் டெல்லி... தம்முடைய முடிவு எதையும் நத்தம் விசுவநாதனிடம் ஓபிஎஸ் ஒன்றும் சொல்லவில்லை என்றும் அதில் மிகுந்த கடுப்பில் நத்தம் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 தனித்து இயங்கும் பன்னீர்

தனித்து இயங்கும் பன்னீர்

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பிறகு ஓபிஎஸ் நடவடிக்கைகள் தனித்தே உள்ளன என்றும், அவரும் கேபி முனுசாமியும் மட்டும்தான் ஆலோசனை நடத்துகிறார்கள் என்றும் நத்தம் தரப்பு கொந்தளிக்கிறது. இது தொடர்கதையாகிவிட்டது.

 கழட்டிவிடப்பட்ட நத்தம்

கழட்டிவிடப்பட்ட நத்தம்

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு முன் கலந்து பேச நத்தம் விசுவநாதன் அழைக்கப்படுவதில்லை.பல நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதால் நத்தம் விஸ்வநாதன் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.

 ஓய்வுக்கு ரெடியாகும் நத்தம்

ஓய்வுக்கு ரெடியாகும் நத்தம்

நத்தம் விசுவநாதன் விரைவில் ஓ.பி.எஸ் அணியிலிருந்து இ.பி.எஸ் அணிக்கு இடமாறுதல் ஆகலாம். இல்லையென்றால் அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கலாம் என்ற மன நிலையில் இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

English summary
OPS Team will split soon, Former Minister Natham Vishwanathan is coming out from ops team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X